96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கல்லூரியில் விடுமுறை., கட்டிட வேலைக்கு சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி..! துடிக்க துடிக்க நடந்த பயங்கரம்..!!
கட்டிட வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் மின்மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் நரியம்பட்டியைச் சார்ந்தவர் சாமிக்கண்ணு. இவரின் மகன் வீரமணி (வயது 19). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். தற்போது அவருக்கு விடுமுறை இதனால் அடிக்கடி கட்டிட வேலைக்காக சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் பல்லடம் அருகில் உள்ள கொடுவாய் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக கட்டிட பணிக்கு சென்று வந்துள்ளார். நேற்று கட்டிடத்தில் தண்ணீர் விடுவதற்காக மின் மோட்டாரை இயக்கிய போது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்டவர் உயிருக்காக போராடியதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற சென்றுள்ளனர். அதில் சரவணன் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சகஊழியர்கள் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அப்போது வீரமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சரவணனுக்கு காயம் மட்டும் இருக்கவே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவினாசிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.