96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே... கிடுகிடுவென உயர்ந்த வணிக பயன்பாடு சிலிண்டர் விலை... எவ்வளவு தெரியுமா.?
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.
அந்த வகையில் இன்று புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.