கண்கலங்கவைக்கும் தமிழக கொரோனா மரணங்கள்.! கடந்த 24 மணிநேரத்தில் எத்தனைபேர் மரணம், பாதிப்பு தெரியுமா.?



corona increased in tamilnadu

நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிக பாதிப்பில் கர்நாடகா முதல் இடத்திலும், கேரளா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 ஆக அதிகரித்துள்ளது.

corona

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 6,991 பேர் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19,287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.