ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கொரோனா சிகிச்சை மையத்தின் மாடியில் இருந்து குதித்த கொரோனா நோயாளி.! அதிர்ச்சி சம்பவம்.!
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்த 24-ந் தேதியில் இருந்து தினசரி நோய் தொற்று கணிசமாக குறைந்து வருகிறது.
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருவரும் துவாக்குடி என்.ஐ.டி.யில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கொரோனா சிகிச்சை மையத்தின் 2-வது மாடியில் இருந்து ஆரோக்கியராஜ் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அவருக்கு கால் எலும்பு முறிந்தது. மேலும், முகத்திலும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக ஆரோக்கியராஜ் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.