96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கொரோனா பாதிப்பு.! மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.. வெளியான புதிய அறிவிப்பு.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து, நீண்ட ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேபோல் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் அரியலூரில் இருவேறு பள்ளிகளை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், 12-வகுப்பு மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த வகுப்பறை மூடப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை புதிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதில், காய்ச்சல், இருமல், உடல்வலி, சோர்வு, வாந்தி, பேதி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.