ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதல் விவகாரம்.. நெருக்கமான படங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய கள்ளக்காதலி.. கடுப்பான கள்ளக்காதலனின் கொடூர செயல்..!
![Counterfeiting issue.. Close-up pictures were exposed by the counterfeiter.](https://cdn.tamilspark.com/large/large_n47676267016778469867507b282eea93dcb5af291d40f6c4db45e3-58102.jpg)
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினி வரதப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில் - பிரேமா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரேமா அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பிரேமாவுக்கும் ஸ்டூடியோவில் வேலை பார்க்கும் விஜய் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரேமாவின் கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஜயை வீட்டிற்கு வர சொல்லி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட விஜய் பிரேமாவின் வீட்டை விட்டு சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பிரேமாவின் வீட்டிற்குள் இருந்து அலரல் சத்தம் வரவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரேமா உடல் முழுவதும் தீப்பற்றி எறிந்து வலி தாங்காமல் பிரேமா அங்கும் இங்கும் ஓடி உள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து பிரேமாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அங்கு பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரேமா உயிரிழந்துள்ளார்.
மேலும் பிரேமா உயிர் இழப்பதற்கு முன்பு விஜய் தன்னை தீ வைத்து எரித்ததாக போலீசாரிடம் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து விஜயை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜய் பிரேமாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பிரேமா சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் ஆத்திரமடைந்து பிரேமாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.