மருத்துவ முகாம் பெயரில், நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு மதுகொடுத்து பாலியல் பலாத்காரம்.. கடலூரில் சிறுமி தற்கொலை முயற்சி.!!



Cuddalore Nursing College Students Sexual Abused Name of Medical Scheme

நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளை மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்வதாக கூறி, விடுதியில் தங்கவைத்து மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏ.கே குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கவிதாமணி (வயது 17), இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. கவிதாமணி பண்ரூட்டி - சென்னை சாலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதல் வருடம் பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று பிரபாவதி இரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், தகவல் அறிந்து பண்ரூட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கவிதாமணி பயின்று வந்த நர்சிங் கல்லூரி சார்பில் மாதம்தோறும் மருத்துவ முகாம் நடத்தி வந்துள்ளனர். கடந்த மாதத்தில் சேலம், ஏற்காடு பகுதியில் மருத்துவ முகாம் நடந்துள்ளது. இந்த முகாமுக்கு கவிதாமணி உட்பட பல மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு மற்றும் பிரேம் ஆகியோர் சென்றுள்ளனர். 

Cuddalore

அனைவரும் ஏற்காடு பகுதியில் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், மாணவிகளிடம் பல மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக உடன் வந்தவர்களான கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வலையில் விழுந்த மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மறைமுகமாக மதுபானம் வழங்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு திரும்பிய நிலையில், மீண்டும் மருத்துவ முகாமுக்கு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கவிதாமணியின் சகோதரரிடம் கூறி கதறியழுத நிலையில், அண்ணனுக்கு விஷயம் தெரியவந்துவிட்டது என அஞ்சிய மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு, பிரேம் ஆகியோரைகளை தேடி வந்த நிலையில், இவர்களில் நிஷா மற்றும் அன்பு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறரை தேடி வருகின்றனர்.