மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முந்திரி விவசாயிகளிடம் ரூ.1 கோடி மோசடி; இளம்பெண்ணை சிறைபிடித்ததால் பரபரப்பு.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, சாத்திப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் வினொலியா. இவர் முந்திரி ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முந்திரி விவசாயிகளிடம், டன் கணக்கில் முந்திரியை கொள்முதல் செய்து இருக்கிறார்.
விவசாயிகள் புகார்
கொள்முதல் செய்யப்பட்ட முந்திரிகளுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த வினொலியாவிடம், விவசாயிகள் பலமுறை பணத்தை கேட்டும் பலன் இல்லை. ஒருகட்டத்தில் வினொலியா தலைமறைவானதைத் தொடர்ந்து, அவர் மீது காவல்நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 1 வயது பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெருநாய்? - திட்டக்குடியில் அதிர்ச்சி.. தாய் கண்ணீர்.!
சிறைபிடித்து பரபரப்பு சம்பவம்
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று சொந்த ஊருக்கு வினொலியா வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த விவசாயிகள், அவரை சிறைபிடித்து வாக்குவாதம் செய்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "எல்லாமே ப்ரீ, கைலாஸாவில் பணத்திற்கு மதிப்பில்லை" - நித்யானந்தா திகீர்.!