96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பூக்குழிக்குள் தவறி விழுந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பரிதாப பலி.. கடலூர் அருகே சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டையில் வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 46). இவர் வழிச்சோதனைப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி பாதிரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் கணந்துகொண்டுள்ளார்.
முத்துக்குமாரும் பூவில் இறங்கிய நிலையில், அப்போது, எதிர்ப்பாராத விதமாக பூக்குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்தவரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.