குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சிறுமியையும் விட்டுவைக்காத டெங்கு..!! தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு..!!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.
தமிழகத்தில் பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருவதனால், பொதுமக்களுக்கு மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. இதனால், கொரோனா சிகிச்சையை தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கோவையில் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் என்ற பெயரில் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் குழந்தை உட்பட 4 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.