மைவி3 ஆட்ஸ் பணம் ரூ.100 கோடிக்கு குழந்தையில்லா தம்பதி கொடூர கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்.!



  Dharmapuri Couple Murder Case Police Arrested 4 Persons 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை, சிப்காட் வளாகம் அமையவுள்ள இடத்தில், சம்பவத்தன்று கணவன் - மனைவி சடலம் மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்கள் யார்? எனவும் விசாரணை நடந்து வந்தது. 

விசாரணையில், உயிரிழந்த இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவியான மணிகண்டன் - பிரேமலதா என்பது உறுதியானது. தேனியை சேர்ந்த தேவராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக மணிகண்டன் வேலை பார்ப்பது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் கார் ஓட்டுநராக தேவராஜ் வேலை பார்த்து இருக்கிறார். 

இதனிடையே, தேவராஜிடம் மணிகண்டன் தனது நிறுவனத்தின் பங்குகள் ரூ.100 கோடி அளவில் வரவேண்டும். அந்த பணத்தை இணையவழியில் பெற உரிய ஆட்கள் தேவை என்றும் கூறி இருக்கிறார். 100 கோடி பணம் என்றதும், குழந்தை இல்லாமல் வசித்து வந்த தம்பதியை கொன்று, பணத்தை நாமே சுருட்டிக்கொள்ளலாம் என தேவராஜ் சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்.

இதையும் படிங்க: மிரட்டி கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி.!! 45 வயது நபர் போக்சோவில் கைது.!!

நம்பிக்கையாக அழைத்துச் சென்று கொடூரம்

அவரின் திட்டப்படி நண்பர்கள் சிலரை நெட் பேங்கிங்கில் கைதேர்ந்த நபர்கள் எனக்கூறி அஸ்வின், சபரி, நந்தகுமார், பிரவீன் குமார் ஆகியோரை கூட்டாளிகளாக சேர்த்து, தர்மபுரி பகுதியில் குறைந்த விலைக்கு நிலம் ஒன்று விற்பனைக்கு வருவதால், அதனை வாங்க பேரம் பேசிவிட்டு, பணத்தையும் கைமாற்றி வந்துவிடலாம் என தெரிவித்து தம்பதியை தேவராஜ் அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியான சிப்காட் அமையவுள்ள இடத்தில் இருவரையும் கொலை செய்து, உடலை அங்கேயே வீசிவிட்டு பின் அங்கிருந்து மாயமானது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வினையில் முடிந்த பள்ளி பருவ காதல்... பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.!! 17 வயது மாணவன் கைது.!!