53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மிரட்டி கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி.!! 45 வயது நபர் போக்சோவில் கைது.!!
உதவி செய்வது போல் நடித்து 13 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 45 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்நிலை சரியில்லாத ஒன்பதாம் வகுப்பு மாணவி
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பேட் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை மாணவிக்கு உடல்நிலை சரியில்லை. இதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தையான கூலி தொழிலாளி, மாணவி மற்றும் அவரின் தம்பியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்.
உதவி செய்வது போல் நாடகம்
இந்நிலையில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் ரஜினி என்ற 45 வயது நபர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார். அப்போது மாணவியின் தந்தையிடம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது குறித்து கேட்டுள்ளார். மாணவியின் தந்தை மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நிற்பதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தான் மாணவியை அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி மாணவி மற்றும் அவரது தம்பியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: வினையில் முடிந்த பள்ளி பருவ காதல்... பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.!! 17 வயது மாணவன் கைது.!!
புதருக்குள் வைத்து பலாத்காரம்
மேலும் மருத்துவமனை செல்லும் வழியில் மாணவியின் தம்பியை ஒரு இடத்தில் இறக்கிவிட்டு மாணவியை மட்டும் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காண்பித்து விட்டு வரும்போது புதருக்குள் அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து வெளியே கூறினால் மாணவி மற்றும் அவரது குடும்பத்தை அழித்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவி மற்றும் அவரது தம்பியை வீட்டில் இறக்கி விட்டிருக்கிறார் ரஜினி.
காவல்துறை கைது
இந்நிலையில் வீடு திரும்பிய மாணவி மேலும் சோர்வாக காணப்பட்டுள்ளார். அப்போது மாணவியின் சகோதரி இது குறித்து கேட்டிருக்கிறார். மாணவி அவரிடம் தனக்கு நடந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோழி பண்ணை உரிமையாளர் ரஜினி மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் பரிசோதித்ததில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "அவ பொணத்த கள்ள புருஷன் வீட்டுக்கே அனுப்புங்க.." இறந்த பின்பும் அவமானப்பட்ட பெண்.!! கள்ளக்காதல் விபரீதம்.!!