மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உணவக உரிமையாளரை செருப்பால் தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ; பகீர் காட்சிகள் வைரல்.!
தர்மபுரி மாவட்ட அரசுத்தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தினமும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். பலரும் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் அங்கு 24 மணிநேரமும் செயல்படும் உணவகம் மற்றும் தேநீர் கடைகள் இருக்கின்றன. இதனிடையே, மருத்துவமனை அருகே உள்ள உணவகம் ஒன்றில், சம்பவத்தன்று எஸ்எஸ்ஐ காவேரி என்பவர் சாப்பிட்டார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உணவகத்தில் உணவு சாப்பிட்ட எஸ்எஸ்ஐ காவேரி என்பவர், நிலுவை பணம் ரூ.20 கேட்ட உரிமையாளர் முத்தமிழ் என்பவரை காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது#Dharmapuri | #Hotel | #Police |… pic.twitter.com/uIzXwOIBdA
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 4, 2024
வீடியோ நன்றி: PuthiyathalaimuraiTV
இதையும் படிங்க: கழிவறையா? பாம்புகளின் கூடாரமா? அதிர்ச்சியை தந்த செய்யாறு அரசு கலை கல்லூரி பெண்கள் கழிவறை.!
அவரிடம் நிலுவையில் இருந்த பணத்தை, உணவகத்தின் உரிமையாளர் முத்தமிழ் என்பவர் கேட்டுள்ளார். இதனால் ஆவேசமான அதிகாரி, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்க பாய்ந்தார்.
இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகிவிடவே, அது சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் மாவட்ட எஸ்.பி எஸ்.எஸ்.ஐ காவேரியை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டத்தால் பரபரப்பு; திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பகீர்.!