#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
இறந்து கிடந்த பிச்சைக்காரரின் வங்கிக்கணக்கில் பல லட்சக் கணக்கில் பணம்! அவர் இப்படிப்பட்டவரா? விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!
மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்து கிடந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் சுமார் 56 லட்சம் பணம் இருந்தது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் பிச்சைக்கார முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீஸார் அவர் குறித்த தகவலை அறிந்து கொள்ள விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவரது பெயர் பூல் பாண்டியன் எனவும், அவர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் போலீசார் அவரது உடமைகளை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது பையில் வங்கி கணக்கு புத்தகம் இருந்துள்ளது. அதை சோதித்துப் பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 36 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேமிப்பாக 20 லட்சம் இருந்துள்ளது. இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், பூல்பாண்டியன் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் ஏன் இப்படி பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்தார். அவருக்கு இவ்வளவு பணம் ஏது? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதியவர் பூல்பாண்டியன் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம், கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்தை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.