நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
வாங்கிய கடனை கொடுக்காமல், மாற்றுத்திறனாளியை குடும்பத்தோடு வெளியேற்றிய தாய்மாமன்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி செயல்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, அக்ரகாரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் மாற்றுத்திறனாளி ஆவார். ரமேஷின் தந்தை ராமர், கடந்த 2018 ஆம் வருடத்தில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு ரமேஷின் தாய்மாமன் அழகேசன், அவரின் மனைவி அய்யம்மாள் ஆகியோரிடம் ரூ.5 இலட்சம் கொடுத்துள்ளார்.
தனது பணத்தை ரமேஷிடம் கொடுத்திடுமாறு அழகேசனிடம் ராமர் தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடமாக ரமேஷ் தனது பணத்தை கேட்டு வந்தும் பலனில்லை. இந்நிலையில், அழகேசனின் இல்ல விழாவில் வரும் மொய்ப்பணத்தை வைத்து பணத்தை கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த பிப். 11 ஆம் தேதி அழகேசனின் வீட்டில் சுபநிகழ்ச்சியும் நடைபெற்று முடிந்த நிலையில், ரமேஷ் தனது பணத்தை கேட்டு சென்றுள்ளார். அழகேசனின் வீட்டில் ஆத்திரத்துடன் பதில் வந்த நிலையில், ரமேஷை அழகேசன், அய்யம்மாள், உறவினர் காளியம்மாள் ஆகியோர் சேர்ந்து பணம் எதுவும் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
மேலும், ரமேஷ், ரமேஷின் மனைவி தனலட்சுமி, குழந்தைகள் ஆகியோரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பணம் கேட்டு வந்தால் குடும்பத்துடன் கொலை செய்திடுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் அழகேசன், அவரின் மனைவி அய்யம்மாள், காளியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.