திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திண்டுக்கல் தரணி குழுமம் நிறுவனரின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.!
மணல்குவாரி தொடர்பாக புகார் சர்ச்சையில் சிக்கிய தரணி குழும உரிமையாளரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் தொழிலதிபர் கே. ரத்தினம். தரணி குழுமம் நிறுவனராக இவர் இருக்கிறார். மாவட்ட அளவில் பல தொழில்களை செய்து வரும் நிலையில், இன்று அவரின் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டிலில் உறங்கிய தந்தை மகனுக்கு காத்திருந்த எமன்; கழுத்து நெரித்து, மூச்சுத்திணறி சோகம்.. நட்டு கழன்று பரிதாபம்.!
அதிகாரிகள் சோதனை
ரத்தினத்தின் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2 மணிநேரத்திற்கு மேலாக 2 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே 2 முறை சோதனை நடைபெற்று இருந்த நிலையில், மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது.
மணல்குவாரி விவகாரம்
மணல்குவாரி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது. பாதுகாப்பு கருதி நிகழ்விடத்தில் காவல்துறை பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடக்கிறது.
இதையும் படிங்க: #Big Breaking: தாய்-தந்தை, மகன் கொடூர கொலை.. தமிழகமே அதிர்ச்சி.. பல்லடத்தில் துயரம்.!