#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கட்டிலில் உறங்கிய தந்தை மகனுக்கு காத்திருந்த எமன்; கழுத்து நெரித்து, மூச்சுத்திணறி சோகம்.. நட்டு கழன்று பரிதாபம்.!
நள்ளிரவு நேரத்தில் தந்தை மகனின் உயிரை கட்டில் போல்ட் கழன்று பறித்துள்ள சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி, காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபி கண்ணன் (வயது 35). இவர் டைலர் ஆவார், தற்போது வீட்டிலேயே துணிகள் தைத்துக்கொடுக்கிறார். கோபியின் மனைவி யோகேஸ்வரி (வயது 32). இவர் நத்தம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: #BigNews: மேல்மருவத்தூர்: குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்; உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் இருவர் பரிதாப பலி.!
கட்டிலில் உறங்கியவர்களுக்கு காத்திருந்த சோகம்
தம்பதிகளுக்கு 10 வயதுடைய கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று இரவு நேர வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தந்தை-மகன் இருந்துள்ளனர். இருவரும் இரும்பு கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர்.
தம்பதிகள் மாடி வீட்டில் குடும்பமாக வசித்து வரும் நிலையில், கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் இருக்கிறார். வீட்டின் கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் உறங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் திடீரென கட்டிலின் இரும்பு போல்ட் கழன்று விழுந்துள்ளது. இதனால் கட்டில் சாய்ந்து கோபியின் தலை கம்பிக்கட்டிலின் இடையில் சிக்கியுள்ளது.
மூச்சுத்திணறி மரணம்
அதில் இருந்து உறக்கத்திலேயே மீள முயற்சித்தவர், கீழே விழுந்த மகனின் மீது விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் இவர்கள் இருவரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை கார்த்திக் பள்ளிக்குச் செல்ல கீழ வரவில்லை. இதனால் அவரின் மாமா, சிறுவனை எழுப்பச் சென்றுள்ளார்.
அப்போது இருவரும் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ந்துபோனவர் சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 19 வயது இளம் திமுக நிர்வாகி மரணம்., அலட்சியமாக வேடிக்கை பார்த்தவாறு வாகனம் ஓட்டியவரால் சோகம்;