96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இன்ஸ்டா கள்ளக்காதலனை நம்பி சென்று, கதறிய இளம்பெண்.. பதறவிட்ட கயவன்..! கள்ளக்காதல் கேடுதரும்..!
கள்ளக்காதலனை நம்பி குழந்தைகளுடன் புனேவுக்கு சென்ற பெண்மணியின் பிள்ளைகளை கயவன் அடித்து துன்புறுத்த, தந்தைக்கு தொடர்புகொண்டு பெண் கதறியதால் வேடசந்தூர் காவல் துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கணவன் இருக்கையில் வாழைப்பழ பேச்சில் கவிழ்ந்தாள் எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆர்.எச் காலனியில் தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 6 வயது மகனும், 5 வயது மகளும் இருக்கின்றனர். தம்பதியில் இளம்பெண்ணுக்கு 30 வயது ஆகிறது. அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, அதனை உபயோகம் செய்து வந்ததாக தெரியவருகிறது.
இதன் மூலமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்படவே, இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் இரவு பகலாக செல்போனில் கள்ளக்காதலை உருகி உருகி வளர்த்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் வாலிபர் இளம்பெண்ணை தனது ஊருக்கு வரச்சொல்லி அழைக்கவே, இளம்பெண்ணும் தனது குழந்தைகளுடன் புனேவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானதால் மனதுடைந்தபோன கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்காதலில் உல்லாசமாக இருக்கலாம் என்று எண்ணி புனேவுக்கு சென்ற பெண்ணுக்கு பெருங்கொடுமையாக, அவரின் கள்ளக்காதலன் பெண்ணின் குழந்தைகளை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இந்த தகவலை தந்தைக்கு தொடர்புகொண்டு தெரிவித்த பெண்மணி, தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளார்.
இதனைக்கேட்டு பதறிப்போன பெண்ணின் தந்தை வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தனிப்படை காவல் துறையினர் புனேவுக்கு சென்று புனே காவல் துறையினர் உதவியுடன் இளம்பெண் மற்றும் குழந்தைகளை மீட்டுள்ளனர்.
கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்ட நிலையில், அவனுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட இளம்பெண் கணவருடன் நான் செல்லமாட்டேன். குழந்தைகளை அவருடன் அனுப்பி வைத்திடுங்கள் என்று கலவரம் செய்ய, அவருக்கு அறிவுரை கூறிய காவல் துறையினர் கணவருடன் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணை கள்ளக்காதல் வலையில் வீழ்த்தி, நயவஞ்சகமாக புனேவுக்கு வரவழைத்து குழந்தைகளை கொடுமைப்படுத்தியது ஹபிபுல்லா (வயது 28) என்பது தெரியவந்துள்ளது.
"கள்ளக்காதல் உறவுகள் கேடுதரும்".