96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உறக்கத்தில் செல்போன் கொடுக்க மறுத்த தங்கையை அரிவாள்மணையால் கொன்ற அக்கா.. பரபரப்பு சம்பவம்.!
அதிகாலை நேரத்தில் செல்போன் கொடுக்க மறுத்த தங்கையை அக்கா கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், நாககோனூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 43). இவர் கிராமத்தில் உள்ள நூலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் தங்கவேல். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துள்ளார். இதனால் தமிழ்செல்வி தனது தாயார் பழனியம்மாள் வசிக்க தொடங்கியுள்ளார்.
தமிழ்செல்வியின் உடன்பிறந்த சகோதரி வெங்கடேஸ்வரி (வயது 46). இவரின் கணவர் சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில், தம்பதியின் மகன் நாகமணிகண்டன் கோவையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று இரவில் பழனியம்மாள், வெங்கடேஸ்வரி, தமிழ்செல்வி ஆகியோர் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் வெங்கடேஸ்வரி உறங்கிக்கொண்டு இருந்த தமிழ்செல்வியை எழுப்பி, நாகமணிகண்டனிடம் பேச வேண்டும் என்பதால் செல்போனை கொடு என கேட்டுள்ளார். உறக்கத்தில் இருந்த தமிழ்செல்வி காலையில் பேசலாம் என்று கூறியவாறு தூங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரி காய்கறி நறுக்க வைத்திருந்த அரிவாள்மனையை எடுத்து தமிழ்செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
அதிகாலையில் தமிழ்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி வந்த அக்கம் பக்கத்தினர், விபரத்தை கேட்டறிந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வெங்கடேஸ்வரியின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தமிழ் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.