சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்ட சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்!!



directorate-of-indian-medicine-notice-to-siddha-ayurvedic-doctor-sharmika

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்ஸியின் மகள் சித்த மருத்துவரான ஷர்மிகா. இவர் தொடக்கத்தில் வீட்டிலேயே எளிதில் குணமாகக்கூடிய மருத்துவ குறிப்புகளை வழங்கினார். பின்னர் தனியாக யூடியூப் சேனலில் வீடியோக்கள் மற்றும் நேர்காணல் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் அறிவியலுக்கு புறம்பாக மூட நம்பிக்கையான கருத்துக்களை கூறி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக இவர் பேசிய ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், நல்லவர்களுக்கு கடவுளின் அருள் இருந்தால் குழந்தை பிறக்கும், நம்மைவிட பெரிய மிருகமான மாட்டை சாப்பிடக்கூடாது என்றொல்லாம் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

siddha doctor

இவ்வாறு சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இன்னும் 15 நாட்களுக்குள் ஷர்மிகா இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.