96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மூச்சு திணறல் ஏற்பட்டு மாற்றுத்திறனாளி பெண் பலி.!
விருதுநகர் மாவட்டம் கட்டபொம்மன் தெருவில் மாற்றுத்திறனாளியான தாயம்மாள் தனது குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென்று தாயம்மாளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தாயம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விருதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாயமமாள் கடந்த 10 ஆண்டுகளாக இழுப்பு நோயால் அவதிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளியான தாயம்மாள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.