#Breaking: அப்போலோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் அனுமதி!. சோகத்தில் மூழ்கிய திமுகவினர்!.



dmk-general-secretary-admitted-in-hospital

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் இவர் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென இன்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

dmk

இந்த தகவலை அறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் தி.மு.க கட்சியினர் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ளனர்.