திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் காலமானார்.. சோகத்தில் தொண்டர்கள்.!



DMK general secretary k anbalagan passed away

திமுக கட்சியின் பொது செயலாளரும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான க. அன்பழகன் அவர்கள் தனது 98 வாது வயதில்  உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்துவந்த க. அன்பழகன் அவர்கள் , மூச்சு திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றில் இருந்து, இன்று வரை தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு உயிர் இழந்தார்.

மிகவும் நேர்மையான அரசியல்வாதி என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர். ராமதாசும், 10 கோடி தமிழ் மக்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் அழகிரியும், மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.