பெண்கள் காலேஜ் தான் டார்கெட், பைக் டாக்சி ஓட்டுனர்கள் பெண்களிடம் அத்துமீறல்? - ரவி முத்துசாமி ஐபிஎஸ் அட்வைஸ்.!



Dr Ravi Muthusamy IPS Warning to Girls about Bike Taxi 

கைவண்டி, ரிக்ஸா, ஆட்டோ, கார் என காலத்திற்கேற்ப மக்களின் தனிப்பட்ட பயணங்களும் முன்னேற்றம் அடைந்துள்ளன. சில நேரம் பயணிகள் வாகனங்களின் ஓட்டுநர்களால் துன்புறுத்தப்படுவது தொடர்கதையாகிறது. அனைத்து ஓட்டுநர்களும் அப்படி இல்லை எனினும், சிலரால் பெண்களுக்கு எதிரான செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விஷயம் குறித்து எச்சரித்துள்ள ரவி முத்துசாமி ஐபிஎஸ், எல்லோருடைய பாதுகாப்பும் மிகவும் முக்கியம். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு மிகமிகமுக்கியம். இன்றளவில் பைக் டாக்சி அதிகம் வந்துவிட்டது. இதில் 80 - 90 % நபர்கள் பிழைப்புக்காக பைக் டாக்சி வைத்துள்ளனர். 

இதில் 10 % பேர் அதனை தவறாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்களின் கல்லூரி அருகே, விலையுயர்ந்த இருசக்கர வாகனம் கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பவர்கள், பெண்கள் கல்லூரி முடிந்ததும் செயலியை பயன்படுத்தி புக்கிங் செய்வார்கள். 

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்; 21 வயது இளைஞன் போக்ஸோவில் கைது.. காதல் பெயரில் கட்டாயப்படுத்தி அத்துமீறல்.!

அவர்களுடன் பயணம் செய்யும்போது, பைக் ஓட்டுநர் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயனப்டுத்துகிறேன் என பேச்சுக்கொடுத்து, போன் நம்பர் உட்பட பிற விபரங்களை பெற்று, சில நேரங்களில் விபரீதத்தை முடிகிறது. 

பெண்கள் பைக் டாக்சியில் பயணிக்கும்போது, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர் உங்களிடம் பேச்சுக்கொடுத்து சில தகவலை கேட்கிறார் என்றால், உங்களை பற்றி அவரிடம் கூற வேண்டாம். 

இந்த காலத்தில் தெரிந்தவர்களை நம்ப முடியாது, தெரியாதவர்களை எப்படி நம்ப முடியும்? கவனமாக இருங்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பரிதாப பலி.!