#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாட்ஸ் அப் மூலம் போதை மாத்திரை விற்பனை.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
சென்னையில் வாட்ஸ் அப் மூலம் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ரவுடி ஒருவர் வாட்ஸ் அப் குழு அமைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் சேர்ந்த ரவுடி சுரேஷ் ஒரு பையில் போதை மாத்திரைகளை வைத்து வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சுற்றி வளைத்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 250 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்று அங்குள்ள மெடிக்கல் ஷாப்களில் அதிக அளவில் போதை மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.