குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பத்திரிக்கையாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட ஒரே கேள்வி! பதில் கூறமுடியாமல் திகைத்து நின்ற பத்திரிக்கையாளர்கள்!
திமுக எம்பி ஆர் எஸ் பாரதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “டிவி சேணல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது என பேசினார்.
திமுக எம்பி ஆர் எஸ் பாரதியின் பேச்சிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ். பாரதி நிதானம் தவறி, தரம்தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியுள்ளதாக அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ். பாரதி ஊடகங்களை பற்றி தவறாக பேசியதை எந்த ஊடகங்களாவது கூறினீர்களா? அதேபோல் நாங்கள் செய்யும் நல்ல திட்டங்களை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.
கொச்சையான வாரத்தை சொன்ன ஆர்.எஸ்.பாரதியை எந்த ஊடகமும், பத்திரிக்கையும் கண்டிக்கவில்லை. அதற்காக எந்த எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தீர்களாக?.. ஆனால், அவர்களுடைய கட்சி சார்ந்த விளம்பரம் மற்றும் செய்திகள் தான் அடிக்கடி வருகிறது என கேள்வி எழுப்பினார். முதல்வர் சிரித்துக்கொண்டே எதார்த்தமாக கேட்ட கேள்விக்கு பத்திரிகையாளர்களால் பதில் கூறமுடியவில்லை.