ஸ்டாலின் செய்த செயலை புகைப்பட ஆதாரத்துடன் மக்களிடம் புட்டு புட்டு வைத்த தமிழக முதல்வர்!



Edapadi palanisami talk about stalin

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகராட்சி மைதானத்தில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பொதுமக்களிடையே பேசினார்.

பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். இன்றைக்கு, துறை வாரியாக தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். மின்சாரத் துறையில், தேசிய விருது, வேளாண்மைத் துறையில் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உணவு தானிய உற்பத்தி. இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்து தேசிய விருதை பெற்ற ஒரே அரசு தமிழ்நாடு அரசு என தெரிவித்தார்.

eps

 விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது எனக்கூறினார். ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, நான் தான் உதாரணம் என்றார். சமீபத்தில் ஸ்டாலின் கரும்பு தோட்டத்திற்குள் சிமெண்ட் சாலை போட்டு, கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு நடந்ததை பற்றி கூறி. அதன் புகைப்படத்தையும் மக்களிடையே காட்டினார்.

ஆனால் நான் ஏர்பிடித்து விவசாயம் செய்தவன். சேற்றில் கால் வைத்து உழைத்தவன், நான் சமீபத்தில் நெற்கதிர் அறுவடை செய்ததை கூட பார்த்திருப்பீர்கள். பச்சை துண்டு போட்டால் விவசாயி ஆகிடலாமா என எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்கிறார். விவசயியால் மட்டுமே பச்சை துண்டு அணியமுடியும் என பேசினார்.