ஆட்களை ஏவி தன் மீதே ஆசிட் ஊற்றிய கள்ளக்காதலி..!! அம்பலத்துக்கு வந்த நாடகம்..!!



faker-who-seduced-people-and-poured-acid-on-herself

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே   மாடத்தூர்கோணம் பகுதியில் வசித்து வருபவர் லதா (46). இவர்  சித்திரங்கோடு அருகே ரைஸ் மில் ஒன்று நடத்தி வருகிறார்.  

கடந்த 31 -ஆம் தேதி லதா தனது ரைஸ் மில்லிருந்து உண்ணியூர்கோணம் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடினர். அங்கிருந்தவர்கள், படுகாயமடைந்த  லதாவை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு லதா மீதே சந்தேகம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் லதா பல உண்மைகளை கூறியுள்ளார். தனக்கு சுமார் 35 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாகவும் கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க முதலார் பகுதியை சேர்ந்த கள்ளக் காதலன் ஜெஸ்டின் கிருமாதாஸ் என்பவருடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருபாதாஸ் (52), மற்றும் அவருக்கு உதவிய ஜெஸ்டின்ராபின் (39), ஷாஜின்(23), அர்ஜூன் குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.