மாட்டு சாணத்திற்காக தவமாய் காத்துக்கிடக்கும் குடும்பம்.! காரணத்தை கேட்டா ஷாக்காகிருவீங்க!!



family weighting for cow dung

சிர்சாவில் கலனவல்லி என்ற  பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ்.இவரது மனைவி மற்றும் மருமகள் சமையல் செய்வதற்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த போது அங்கு பெரிய கிண்ணம் ஒன்றில் நகைகளைக் கழட்டி வைத்துள்ளனர்.

பின்னர் மறந்தவாறு காய்கறி வெட்டிய கழிவுகளையும் அந்த கிண்ணத்திலேயே போட்டுள்ளனர். பின்னர் அதனை அப்படியே  குப்பையில் கொட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த காய்கறிகளை நகையுடன் சேர்த்து வெளியே சென்ற காளை மாடு ஒன்று  சாப்பிட்டுள்ளது.

cow dungஅதனை தொடர்ந்து நகைகளை காணவில்லை என தேடிய அவர்கள் பின்னர் யாபகம் வந்த நிலையில் தனது வீட்டில் இருந்த சிசிடிவி மூலம் காளை மாட்டினைக் கண்டறிந்துள்ளனர். 
பின்னர் இதுகுறித்து மருத்துவரின் ஆலோசனை மேற்கொண்ட பின் அந்த மாட்டுசாணத்தின் மூலம் நகை வெளியேவரும் என்ற நம்பிக்கையுடன் தனது வீட்டின் அருகே மாட்டை கட்டிவைத்து அதற்கு சாப்பாடு கொடுத்து வருகின்றனர்.

 மேலும் மாட்டுசாணத்தின் மூலம் நகைகள் கிடைக்காவிட்டால் அந்த காளை மாட்டை அவர்கள் கோசாலைக்கு அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளனர்.