குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அம்மா, அப்பா இருவரும் கொரோனாவால் உயிரிழப்பு..! அவர்கள் இறந்ததைக்கூட அறியாமல் தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்.!
கொரோனாவால் தாய் தந்தை இருவரும் உயிரிழந்துவிட்ட நிலையில் மூளை வளர்ச்சி இல்லாத அவர்களது ஒரே மகன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கே. வி.பி கார்டன். இந்த பகுதியில் வசித்துவந்தவர்கள் ஏ.கே.அருணாச்சலம் (62). இவருடைய மனைவி கீதா (58) மற்றும் இவர்கள் ஒரே மகன் மணி (26). மணி மூளை வளர்ச்சி குன்றியவர்.
அருணாச்சலமும் கண் பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி ஆவர், ஆனால் மிகுந்த ஆற்றல்மிக்க இவர் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராக பணியாற்றிவந்துள்ளார். இந்த கொரோனா காலத்திலும் கண் பார்வையற்றவர்களின் குறைகளை தீர்க்க அருணாச்சலம் ஓடி ஓடி உதவி செய்து வந்துள்ளார்.
இந்த சூழலில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, அவர் மூலம் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் தாய் நேற்று இரவும், தந்தை இன்று காலையிலும் மரணமடைந்தனர்.
தாய், தந்தை இருவரும் உயிரிழந்ததை அறியாத அவர்களின் மூளைவளர்ச்சி குன்றிய ஒரே மகனும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.