குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து.! சம்பவ இடத்திலேயே பலியான தந்தை-மகன்.! சோக சம்பவம்.!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முனிசுந்தரம் என்பவர் சென்னை பூந்தமல்லி அருகே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், முனிசுந்தரம் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று காலை முனிசுந்தரம், தனது 6 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த வாகனம் ஒன்று இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முனிசுந்தரம் மற்றும் அவருடைய மகன் சசிவரதன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலியான தந்தை, மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். தந்தை-மகன் இருவரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.