பெற்ற பிள்ளைகளுக்காக பிச்சை எடுத்த தந்தை!. அவருக்கு போலீசார் கூறிய அறிவுரை!.



father begging for his daughters


வேலூர் மாவட்டத்தில் ரான்ஜி என்பவருக்கு மனைவி இறந்த நிலையில் 3 மகள்கள் இருக்கின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை கடந்துவந்த இவர்  தனது மகள்களின் திருமணத்திற்காக மகாத்மா காந்தி வேடம் அணிந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வந்துள்ளார்.

நேற்று குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நிலையம் எதிரில் மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை பார்த்த பொதுமக்கள் அவருக்கு சில்லரை போட்டு சென்றனர்.

இதனை காவல்துறையினர் முதியவரை அழைத்து விசாரித்தனர். அதற்கு பதிலளித்த ரான்ஜி தனது மகள்களின் திருமணத்திற்காக பணம் சேர்க்க பிச்சை எடுப்பதாக கூறினார். 

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள்  தேசத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுப்பது தவறு எனக் கூறி முதியவர் ரான்ஜியை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.