மாற்றுத்திறனாளி மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... போக்சோ சட்டத்தில் கைது...!



Father who sexually assaulted disabled daughter... Arrested under POCSO Act...

இரண்டு பேருடன் சேர்ந்து பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம்,  மேல காலனி தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் (45). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு பெண் குழந்தைகள் தந்தை கார்த்திக்கிடமும், ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை தாத்தா பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளனர்.  தந்தையிடம் வளர்ந்து வந்த பெண் குழந்தைகள் காவியா (13) மாற்றுத்திறனாளி மற்றும் வினோதினி (7).  

இரு பெண் குழந்தைகளையும்  வளர்த்து வந்த கார்த்திக்,  மதுபோதையில் மாற்றுத்திறனாளி சிறுமியை தினமும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் மாமா சுதாகர் மற்றும் அதே தெருவை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து அருகில் வசிப்பவர்களிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதை கேட்ட  அந்த பகுதியில் இருப்பவர்கள் திருவாரூரில் இருக்கும் சமூக குழந்தைகள் நலன் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து சமூக குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீதும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தை கார்த்தி, மாமா  சுதாகர் இருவரையும்  காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தலைமறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.