96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வட்டிக்கு கடன் கொடுத்தநிலையில், இளம்பெண்ணை சீரழித்து காமுகன் செய்த மோசமான காரியம்! 34 ஆண்டுகள் சிறைதண்டனை!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒருவர் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பைனான்ஸ் கம்பெனியில் 2010ஆம் ஆண்டு கடன் வாங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் அதற்கான வட்டி தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில காலங்களாக அவர்களால் வட்டி தொகையை கட்ட முடியாத நிலையில், பைனான்ஸ் கம்பெனி அதிபர் சிவக்குமார் என்பவர் தனது நண்பன் ரவி என்பவருடன் சேர்ந்து பணம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில். சிவக்குமாரின் செல்வாக்கால் போலீசார்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே குற்றவாளியான ரவி உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து தற்போது பெண்ணை வன்கொடுமை செய்த பைனான்ஸ் அதிபர் சிவகுமாருக்கு 34ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 13 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.