35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.! குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த தண்ணீர்.!
வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்ததால் நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் தற்போதுவரை மழைநீர் தேங்கி உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்து நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து உடனடியாக நோயாளிகள் அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மற்றொரு புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர்.