96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பள்ளிக்குள் நுழைந்து திடீரென ஆசிரியையின் கழுத்தில் கத்தியை வைத்த மர்ம நபர்.! அடுத்து நடந்த பகீர் சம்பவம்.!
கோவை வி.கே.கே. மேனன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூண்டி. இவரது மனைவி அன்புக்கரசி. 39 வயது நிரம்பிய இவர் கோவை சின்னசாமி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அன்புக்கரசி பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு நபர் ஒருவர் வந்து ஆசிரியை அன்புக்கரசியிடம் தன்னுடைய மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என கூறி ஆசிரியையிடம் விவரங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியை அன்புக்கரசியும் மாணவர் சேர்க்கை குறித்த முழு விபரங்களையும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அந்த மர்ம நபர் பேசிக்கொண்டிருந்த போதே, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை அன்புக்கரசி கழுத்தில் வைத்துள்ளார்.
இதனால் பதறிப்போன ஆசிரியை அன்புக்கரசி செய்வதறியாது திகைத்து நின்றார். பின்னர் அந்த மர்ம நபர் ஆசிரியையிடம் கழுத்தில் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி தரும்படி கூறியுள்ளார். கழுத்தில் கத்தி இருக்கும் பயத்தில் ஆசிரியையும் வேறு வழியின்றி தான் அணிந்திருந்த 10 பவுன் தங்கநகைகளை கழட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென நகைகளை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளார் அந்த மர்ம நபர். இதனையடுத்து அந்த ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.