ஆடு மேய்க்கச் சென்று வீடு திரும்பாத பெண்..!! தேடிச்சென்ற பெற்றோர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!



girl-kidnap

ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த  32 வயது மிக்க திருமணம் ஆகாத பெண், தனது வீட்டில் உள்ள ஆடு மாடுகளை, வீட்டின் அருகே உள்ள வடவாற்றின் கரையில் நேற்று முன்தினம் காலையில் மேய்க்கச் சென்றுள்ளார். காலையில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மாலை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து பெண் வீட்டார்கள் அப்பெண்ணை தேடிச் சென்றுள்ளனர். அப்போது அப்பெண்ணின் உடல் வடவாறு கீழ்கரையில் உள்ள ஒரு புதரில் காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதநிலையில், காவலர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில், வந்த தடய அறிவியல் நிபுணர்கள் வடவாற்று கரையில் கிடந்த மீன் பிடிக்கும் தூண்டிலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.  பிறகு, அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(28) என்பவரை சந்தேகத்தின்பேரில் போலிஸார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் பெரியசாமி  அந்த பெண்ணை மறைவான புதருக்குள் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்துள்ளாக பெரியசாமி ஒப்புக்கொண்டார். பின்னர் போலிசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.