ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சினிமாவையே மிஞ்சிட்டாரே! பிளஸ் 2 தேர்வுக்கு பயந்து மாணவி அரங்கேற்றிய நாடகம்! ஆடிப்போன போலீஸார்!
சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் மிகவும் பதற்றத்துடன் ஓடி வந்து தன்னை சிலர் கடத்தி விட்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் இந்நிலையில் பரபரப்புடன் இருந்த அப்பெண்ணை நிதானப்படுத்திய போலீசார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர் அப்பொழுது அவர் தான் பெங்களூரை சேர்ந்தவர். எனது தந்தை ரமேஷ். சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வீட்டிற்கு பால் கொண்டு வந்த நபர் ஒருவர் முகத்தில் மயக்க மருந்து அடித்து அவரது நண்பருடன் என்னை காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.பின்னர் வேறு காருக்கு மாற்றும்போது நான் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூக்கடை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டபோது, அப்பெண் ரயிலில் இருந்து இறங்கி சிறிது தூரம் வந்து பின்னர் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி விட்டு பதற்றமாக காவல் நிலையம் ஓடி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கண்ட போது, நான் பிளஸ் 2 படிக்கிறேன். தேர்வு நடைபெறுகிறது.வேதியல் பாடம் நன்றாக படிக்கவில்லை அதனால் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு ஓடிவந்து கடத்தியது போல நாடகமாடினேன் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.