96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்திய காதலி.. கொடூர முறையில் கொலை செய்த காதலன்.. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!
வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு நிவேதா என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை கேண்டினில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வேலைக்கு சென்ற நிவேதா வீடு திரும்பாததையடுத்து பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் நிவேதா அருகில் இருந்த கல்குவாரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நிவேதா வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தினர் என்பதால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதா பிரகாஷை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் நிவேதாவை அழைத்துச் சென்று கல்குவாரி உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த கொலையை மறைப்பதற்கு பிரகாஷின் நண்பர் நவீன் குமார் என்பவர் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கானது வேலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிவேதாவை பிரகாஷ் கொலை செய்ததும் அதற்கு உடனந்தையாக நவீன் குமார் இருந்ததும் சாட்சிகளின் அடிப்படையில் உறுதியானது. இதனையடுத்து இளம் பெண்ணை திட்டமிட்டு கொலை செய்த பிரகாஷிர்க்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 1,000 ரூபாய் அபராதமும் நவீன் குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.