96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மகளிர் உரிமை தொகை பெயரில் நூதன மோசடி.. இல்லத்தரசிகளே உஷார்.. உள்ளதும் போய்விடும்.!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ஓடிபி எண்கள் எதுவும் கேட்கப்படுவதில்லை எனவும், எனவே இல்லத்தரசிகள் மோசடியாளர்களிடம் ஓடிபி எதையும் கொடுத்து விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம் நேற்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தகுதியான மகளிரின் வங்கி கணக்கிற்கு 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை தொகையை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ள ஒரு கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. சமீப காலமாகவே, ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
கிடைக்கும் கேப்பில் எல்லாம் கிடா வெட்டுவதை போல எந்த புதிய வழி கிடைத்தாலும், புதிய புதிய யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். சிலர் சமீப காலமாக மகளிர் உரிமை திட்டத்தில் சேர ஓடிபி எண் கேட்கப்படுவதாக கூறி கால் செய்து பெண்களை ஏமாற்றி இருக்கின்றனர்.
எனவே இனி அப்படி ஏதாவது அழைப்புகள் வந்தால் அதை நம்பி உங்கள் வங்கி தரவுகளையோ மற்ற தகவல்கள், ஏடிஎம் பின் நம்பர் மற்றும் ஓடிபி உள்ளிட்டவற்றையோ கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்படி ஏதாவது அழைப்புகள் வந்தால் அந்த நம்பரை எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.