ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சக்கர நாற்காலியில் இருந்து நோயாளியை கீழே தள்ளி விடும் மருத்துவ பணியாளர்! அதிர்ச்சி வீடியோ!
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கிட்னி பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டநோயாளியை மருத்துவமனை ஊழியர் சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கிட்னி பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் நாற்காலியில் இருந்து, படுக்கையில் எழுந்து அமர முடியாமல் சிரமப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர் ,அவரை நோயாளி என்று கூட பொருட்படுத்தாமல் சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர் பாஸ்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் உத்தரவின் படி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மருத்துவமனை ஊழியர் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.