96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! இனி வாரத்தில் 5 நாட்களே பணி.!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள், அதாவது சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த மே 15ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஐந்து நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு அலுவலகமும் 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்களும் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு மாற்றியுள்ளது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்ற உத்தரவு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.