வரதட்சணையாக பேசிய நகை போடவில்லை.. திரும்பத் திரும்ப கேட்ட அண்ணன்.. ஆத்திரமடைந்த மாமனாரின் வெறிச்செயல்..!



he-did-not-give-the-jewelry-that-was-spoken-as-dowry-fa

களக்காடு அருகே சிங்கிகுளம் மேல்கரை கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு கனகராஜ், முத்துக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாராயண பெருமாள் என்பவரின் மகளுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து முத்துக்குமார் கோயம்புத்தூரில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் முத்துக்குமார் மனைவிக்கு அவரது தந்தை நாராயண பெருமாள் திருமணத்தின் போது வரதட்சணையாக பேசிய நகையை கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Dowry issues

இதனால் நாராயண பெருமாளிடம் இது தொடர்பாக முத்துக்குமாரின் அண்ணன் கனகராஜ் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். மேலும் சம்பவத்தன்று வரதட்சணை நகை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டவே ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள் அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கனகராஜை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாராயண பெருமாள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.