96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
6-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை .! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்.!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 6-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மானாமதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பிரிட்டோ(55) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இந்த பள்ளியில் படிக்கும் 6-ஆம் வகுப்பு மாணவி தலைமையாசிரியர் தனது ஆடைகளை கிழித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பள்ளிக்கு வருகை புரிந்த காவல்துறை ஆய்வாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும் தலைமை ஆசிரியர் பிரிட்டோ வை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
காவல்துறை விசாரணையில் " மாணவி எழுதும் போது கையில் ஒரு பேப்பரை மறைத்து வைத்து எழுதியதாகவும் அதனை தன்னிடம் தடுமாறு கேட்டபோது மாணவி தர மறுத்ததால் பேப்பரை அவரிடமிருந்து வாங்க முயன்ற போது மாணவியின் மேலாடை தவறுதலாக கிழிந்ததாக" தலைமை ஆசிரியர் பிரிட்டோ தெரிவித்தார். மேலும் மாணவி இடம் வீட்டிற்கு சென்று வேறு ஆடை மாற்றி வருமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.