குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சசிகலாவுக்கு அதிமுக நிர்வாகி கார் கொடுத்து உதவி.! கடும் கோவத்தில் ஒ.பி.எஸ்-ஈ.பி.எஸ் எடுத்த அதிரடி.!
சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா நேற்று காலை சுமார் 7.30 மணி அளவில் பெங்களுருவில் இருந்து சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகும்போது அவர் சென்ற காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில், நேற்று பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார். வேறு காருக்கு மாறிய நிலையில் அவர் முன்பு வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.
சசிகலா மறுபடியும் ஏறிய காரிலும் அதிமுக கொடியும் காரின் முன்புறம் ஜெயலலிதாவின் படமும் பொறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் அதிமுகவில் ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவரின் கார் என தகவல் வெளியானது. சசிகலா வந்த கார் பழுதானதால், எஸ்.ஆர்.சம்பங்கி என்பவரின் காரை வாங்கி பயன்படுத்தியதாக தினகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவுக்கு கார் வழங்கிய அதிமுக நிர்வாகி சம்பங்கி உள்பட வரவேற்பு அளித்த 7 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கழக் கட்டுப்பாட்டை மீறியதால், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.