96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வாக்குசாவடியில் ஹிஜாப் சர்ச்சை.! அந்த வார்டில் பாஜக வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் எத்தனை தெரியுமா.?
தமிழகத்தில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க பல வார்டுகளில் தங்களது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8 வார்டில் ஒரு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், பாஜக முகவர் அந்த மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன, மேலும், அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.