ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திச்சென்ற தம்பதி.! பரிதவித்த பெற்றோர்.! 3 மணி நேரத்தில் போலீசார் காட்டிய அதிரடி.!
ஒடிசா மாநிலம், நவ்ராம் மாவட்டம், கொடிங்கை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா. 35 வயது நிரம்பிய இவருக்கு தாதயமந்தி என்பவருடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், கிருஷ்ணா சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார் .
இந்த நிலையில் நேற்று திடீரென அவரது ஒருமாத ஆண் குழந்தையை காணவில்லை. இதையடுத்து கிருஷ்ணா காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து குழந்தையின் புகைப்படம் மற்றும் தகவல்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ள காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து கண்காணிக்க கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் ரயில்வே போலீசார். அப்போது சந்தேகப்படும் படியாக ஒரு தம்பதி கைக்குழந்தையுடன் ரயில் நிலையத்தின் நடைமேடையில் சுற்றிக் கொண்டிருந்துள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த தம்பதியினர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கேளம்பாக்கத்தில் காணாமல் போன கைக்குழந்தையை கடத்தியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தை திருட்டில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.