குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மதுவால் வந்த வினை.! மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம்.! பரிதவிக்கும் பச்சிளம் குழந்தைகள்.!
சென்னை ECR சின்ன நீலாங்கரை, மேட்டு காலனியைச் சேர்ந்தவர் ஹரி. 36 வயது நிரம்பிய இவருக்கு, கோமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஹரியின் மனைவி கோமதி, சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
ஹரிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஹரி, தனது மனைவி கோமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வழக்கம்போல் நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டைபோட்டுள்ளார்.
அவர்களுக்குள் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஹரி, மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார், ஹரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தந்தையின் குடிபோதையால் தாய் இரத்த வெள்ளத்தில் பிணமாகவும், தந்தை கொலை குற்றத்தில் சிறைக்கு சென்றதால் பச்சிளம் குழந்தைகள் இருவரும் கதறியழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.