குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மனைவியின் தலையை துண்டித்து தலையை மட்டும் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற கணவன்! அதிர்ச்சி சம்பவம்!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் என்பவர் டிவி மெக்கானிக்காக இருந்துவந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, இந்த தம்பதியருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருந்துள்ளனர்.
நரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு நரேஷ் அவரது வீட்டில் குடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது மனைவி தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நரேஷ் திடீரென கத்தியை எடுத்து சாந்தியின் தலையை வெட்டியுள்ளார்.இதனையடுத்து தலையை ஒரு பையில் அடைத்துவிட்டு, மனைவியின் உடலை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.
இந்தநிலையில் மறுநாள் காலை குழந்தைகள் எழுந்ததும் தாயை காணவில்லை என தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது பூட்டியிருந்த அறையை எட்டிப்பார்த்த போது, உள்ளே சாந்தி தலையில்லாமல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சாந்தியின் உறவினர்கள் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அதே நேரத்தில் நரேஷ், மனைவியின் தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நரேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.