கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
சென்னை அருகே பரபரப்பு.. நடத்தையில் சந்தேகம் மனைவி, மகன் வெட்டி படுகொலை.!
சென்னை புது வண்ணாரப்பேட்டை வ உ சி நகரை சேர்ந்தவர் குணசுந்தரி. இவருக்கு மாரி என்பவருடன் திருமணமான நிலையில், 7 வயதில் மகேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இதில் மாரி உடல் நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இதனையடுத்து குணசுந்தரி தனது உறவினரான ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் குணசுந்தரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவரது நடத்தையில் ராஜூவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ அரிவாளால் மனைவி குணசுந்தரி, அவரது மகன் மகேஷ் குமார் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது தடுக்க வந்த மாமியார் நாகவல்லியையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் குணசுந்தரி மற்றும் மகேஷ் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகவல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் பொது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த ராஜுவை தேடி வந்தனர். இந்த நிலையில் நாகவல்லி கொலை செய்ய ராஜு வந்தபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.